அதிபர் மசூத் பெஸஸ்கியான் நாட்டை வழிநடத்துவார்
ஈரானிய உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ali Khamenei) நேற்றைய தாக்குதலில் பலியானதைத் தொடர்ந்து அதிபர் மசூத் பெஸஸ்கியான் (Masoud Pezeshkian) தற்காலிகமாக நாட்டை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் அவருக்குத் துணையாக இருப்பர் என்று ஈரானிய ஊடகம் கூறியது.
திரு கமேனியின் மரணத்துக்கு 40 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஈரான் குறிப்பிட்டது.
நேற்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. அதில் 200க்கும் அதிகமானோர் மாண்டதாக ஈரான் தெரிவித்தது.
ஈரானும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.
திரு கமேனியின் மரணத்துக்குக் காரணமானோரை விடப்போவதில்லை என்று ஈரானிய ராணுவம் சூளுரைத்துள்ளது.
மத்தியக் கிழக்கில் உள்ள சில நாடுகளின் ஆகாயவெளி மூடப்பட்டுள்ளது.

