Sunday, April 19, 2026
Homeசர்வதேசம்ஈரானுக்கு இறுதி வாய்ப்பை அறிவித்த ட்ரம்ப்! உலகையே திரும்பி பார்க்க வைத்த பதிவு

ஈரானுக்கு இறுதி வாய்ப்பை அறிவித்த ட்ரம்ப்! உலகையே திரும்பி பார்க்க வைத்த பதிவு

ஈரான் விவகாரத்தில் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது ‘Truth Social’ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், ஈரான் நாட்டுடன் இனி எந்தவிதமான உடன்படிக்கையும் கிடையாது என்றும், அந்த நாடு “நிபந்தனையற்ற முறையில் சரணடைவது” மட்டுமே ஒரே வழி என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஈரான் சரணடைந்த பிறகு, ஒரு சிறந்த மற்றும் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்படும் என்றும், அதன் பின்னர் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்கத் தீவிரமாகப் பணியாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானின் பொருளாதாரத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரியதாகவும் வலிமையானதாகவும் மாற்றப்போவதாக உறுதியளித்த ட்ரம்ப், ஈரானுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது புகழ்பெற்ற அரசியல் முழக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு, ஈரானை மீண்டும் ஒரு சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற பொருளில் “Make Iran Great Again (MIGA!)”என்ற புதிய கோஷத்தையும் அவர் இந்தப் பதிவில் முன்வைத்துள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks