Sunday, April 19, 2026
Homeசர்வதேசம்ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பாரிய தாக்குதல்!மேலெழுந்த புகை மண்டலம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பாரிய தாக்குதல்!மேலெழுந்த புகை மண்டலம்

ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் இன்றைய தினமும் பாரிய வெடிப்புச்சத்தங்கள் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, அப் பகுதியில் கடுமையான புகை மூட்டம் மேலெழுந்ததாக அந்த ஊடகத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இஸ்ரேல் கட்டாய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்குவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் இன்றைய தினமும் பாரிய வெடிப்புச்சத்தங்கள் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அல் குத்ஸ் தினத்தை முன்னிட்டு அதேபகுதியில் போராட்ட அணிவகுப்பு ஒன்றும் நடாத்தப்பட்டுள்ளதுடன், அதில் ஈரானின் தேசிய பாதுகாப்பு பிரதானி அலி லரிஜானி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

1979இல் ஏற்பட்ட ஈரான் புரட்சியின் பின்னர் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியிலுள்ள வெள்ளிக்கிழமை குறித்த அல் குத்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஈரானியர்களுக்கு இன்று என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு புதிய அச்சுறுத்தலை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks