Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்குவைத் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

குவைத் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் லக்சித ரத்நாயக்க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதல்கள் இடம்பெற்ற போதிலும், குவைத்தில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதைத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துக்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் குவைத்தில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தைக் கருத்திற்கொண்டு தூதுவர் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இது குறித்து அநாவசியமான அச்சம் கொள்ளத் தேவையில்லை அச்சம் வேண்டாம் தொடர் கண்காணிப்பு நிலமையை இலங்கைத் தூதரகம் மிகவும் அவதானத்துடன் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றது.

இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விவகாரங்கள் தொடர்பில் குவைத் பாதுகாப்புப் பிரிவினருடன் தூதரகம் நேரடித் தொடர்பில் உள்ளது ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால் அல்லது உதவி தேவைப்பட்டால் உடனடியாகக் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடியான சூழலில், அங்குள்ள சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து இராஜதந்திர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் குவைத் தூதுவர் லக்சித ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks