Sunday, April 19, 2026
Homeசர்வதேசம்மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் “மிகக்கடுமையான” பழிவாங்கலை முன்னெடுப்பதாக எச்சரித்துள்ளது.

கடந்த 28ஆம் திகதி ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது “பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்” (Devastating offensive operation) நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஈரான் மீண்டும் தாக்கினால், இதுவரை கண்டிராத பலத்துடன் பதிலடி கொடுப்போம்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் கீத் ஸ்டார்மர், தற்காப்பு நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய விமானங்கள் வான்பரப்பில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ, இன்று G7 நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

ஈரானில் ஒரு தரப்பினர் கமேனியின் மறைவைக் கொண்டாடி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் வீதிகளில் இறங்கித் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான தருணத்தில், ஈரானிய அதிகாரிகள் நாட்டில் அதிகார மாற்றம் சீராக நடப்பதையும், ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் விரும்புவதாக சர்வதேச செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks