Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு விரைவில் பதிலடி - ட்ரம்ப்

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ட்ரம்ப்

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மிக விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் தாக்குதலில் 06 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கும், ரியாத் தூதரகத் தாக்குதலுக்கும் அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூஸ்நேசன் ஊடகத்திடம் கருத்து தெரிவித்த போதே இதனை டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா எவ்வாறு பதிலடி கொடுக்கும் என்பதை “நீங்கள் அதை விரைவில் தெரிந்து கொள்வீர்கள்”. ஈரானுக்குள் தரைவழிப் படைகளை அனுப்பி போர் புரிய வேண்டிய அவசியம் தற்போதைக்கு இருக்காது என தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தது இந்தப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks